சிங்கப்பூர் சுற்றுலா-5வது இடத்தில் இந்தியர்கள்!

இது குறித்து அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிங்கப்பூருக்கு சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டும் நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
இதில் இந்தோனேசியா தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2010ல் 2.3 மில்லியன் இந்தோனேசியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்துள்ளனர். இது கடந்த 2009-ம் ஆண்டை விட 32 சதவீதம் அதிகம். 1.17 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. 1.04 மில்லியனுடன் மலேசியா மூன்றாவது இடத்திலும், 8 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளுடன் ஆஸ்திரேலியா நான்காவது இடத்திலும் உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 11.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூர் வந்துள்ளனர். இது வருடா வருடம் 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு வந்த சுற்றுலாப் பயணிகளில் 53 சதவீதம் பேர் சீனா, இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் சிங்கப்பூருக்கு சுற்றுலா மூலம் சுமார் 18.8 பில்லியன் சிங்கப்பூர் டாலர் கிடைத்துள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications