பதவி விலக மறுக்கும் முபாரக்: நாட்டை விட்டு வெளியேறினார் ?
கெய்ரோ: எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது பதவியில் இருந்து உடனடியாக விலக மறுத்துவிட்டார். அவர் செப்டம்பர் மாதம் தான் விலகுவேன் என்று தெரிவித்துள்ளார்.
எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக ஹோஸ்னி முபாரக் தான் அதிபராக சர்வாதிகாரம் செலுத்தி வருகிறார். இதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதி்த்துள்ளனர். அவரை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடே போராட்ட பூமியாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயன்ற முபாரக் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
இந் நிலையில் ராணுவம் ஆட்சியைப் பிடிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தக்ரிர் சதுக்கத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே பேசிய மூத்த ராணுவ கமாண்டர் ஜெனரல் ஹாசன் அல்-ரோயினி, அதிபர் முபாரக் மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம் என்று மிரட்டல் விடுத்தார். நாடும், எம்மக்களின் நலனும்தான் முக்கியம் என மக்களின் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தை விட்டு விலக வேண்டும். இன்று இரவுடன் மக்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் என்றார்.
இந் நிலையிலி இரவில் அரசு
தொலைக்காட்சி உரையாற்றிய முபாரக், நான் வெளிநாட்டவர்கள் சொல்வதை கேட்க மாட்டேன். அடுத்த தேர்தல் வரை எகிப்தியர்களின் நலனைப் பாதுகாப்பதிலும், அரசியலமைப்பை காப்பாற்றுவதிலும் எனக்குள்ள பொறுப்பில் நான் உறுதியாக இருப்பேன் என்றார்.
இந்த பேட்டிக்குக் பிறகு முபாரக் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications