திண்டிவனம் ராமமூர்த்தி தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநில கமிட்டி கலைப்பு

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார் திண்டிவனம். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். மேலும் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தவுடனேயே முதல் ஆளாக அழைக்கப்பட்டவர் திண்டிவனம் தான்.
சீட் கொடுக்கவே கூப்பிடுகிறார்கள் என நினைத்து பெரிய தொகுதிப் பட்டியலோடு போனார் ராமமூர்த்தி. தனது கட்சிக்கு ஒரு 5 சீட் குடுங்க என்று இவர் கேட்க, அப்படியெல்லாம் கேட்கக் கூடாது என்று கூறிவிட்ட ஜெயலலிதா, நல்லா பிரச்சாரம் பண்ணுங்க என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.
இதையடுத்து சில மாதத்தி்ல் தனது தனிக் கட்சியை ஊத்தி மூடிய ராமமூர்த்தி மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். யாருமே இல்லாத கட்சிக்கு ஓடி வந்த அவருக்கு தமிழக பிரிவின் தலைவர் பதவியைத் தந்தார் பவார்.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு கட்சி இருப்பதே தெரியாத அளவுக்கு கட்சியை 'பத்திரமாகப்' பார்த்துக் கொண்டார் ராமமூர்த்தி.
இந் நிலையில் ராமமூர்த்தி தலைமையிலான கமிட்டியே கலைக்கப்பட்டு விட்டதாகவும் , புதிய கமிட்டி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த கட்சியின் அகில இந்திய கமிட்டி அறிவித்துள்ளது.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டில் இருந்து 3 முறை எம்.பியாக தேர்ந்து எடுக்கப்பட்டவருமான டாக்டர் வி.ராஜேஸ்வரன், தமிழ்நாடு கமிட்டியின் அமைப்பாளராக பணியாற்றுவார் என்றும் கூறியுள்ளது.
கட்சியின்தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளரான கோவிந்தராவ் அதிக் கூறுகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து திண்டிவனம் ராமமூர்த்தி நீக்கப்படவில்லை. அவர் உள்பட அவரது தலைமையிலான குழு அனைத்தும் கலைக்கப்பட்டு உள்ளது. கட்சியை வலுப்படுத்துவதற்காகவும், இளைய தலைமுறைக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் இந்த திடீர் மாற்றத்தை சரத்பவார் மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுகவும், தேசியவாத காங்கிரசும் இடம் பெற்றுள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவை என திமுக முன்வந்து கோரினால், அதுபற்றி சரத்பவார் பரிசீலித்து உரிய முடிவு எடுப்பார் என்றார்.
தனது தலைமையிலான கமிட்டி கலைப்பட்டதாவது திண்டிவனம் ராமமூர்த்திக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை..!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications