திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்

புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தமிழ் மக்கள், தமிழ் மண்ணுக்காக போராடி, வாதாடி வரும் இயக்கம்தான் இந்த இயக்கம். இது தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல.
நாங்கள் திமுக கூட்டணியில்தான் உள்ளோம் என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளோம்.
விடுதலை சிறுத்தைக்கு 230 தொகுதிகளிலும் ஓட்டு வங்கி உள்ளது. 120 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும சக்தியாக உள்ளோம். எனவே விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் தேர்தல் முடிவை தீர்மானிக்க முடியாது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு 1 தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். மற்றொரு தொகுதியில் 2,000 ஓட்டுக்களில் மட்டுமே தோல்வி அடைந்தோம். 2 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தால் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைத்திருக்கும்.
வரும் சட்டசபை தேர்தலில் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்க அதிக தொகுதிகளை கேட்போம். இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்த 2011ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் ஆண்டாக அமையும் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்போம். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு எங்கள் கட்சியுடனான பேச்சுவார்த்தையை திமுக தொடஙகும்.
திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும். வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அவர்களை வெளிப்படையாகவே அழைக்கிறோம் என்றார்.
முன்னதாக கந்தவர்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகல் இல்ல திருமணத்தில் பேசிய அவர், நமது கட்சி அங்கீகாரம் பெற 7 சீட்டுகளாவது ஜெயிக்க வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
இப்போது நாம் நமது கட்சியின் அங்கீகாரத்தை பெறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கட்சியின் அங்கீகாரத்தை பெற்றுத் தீர வேண்டும்.
நாம் வெற்றி பெற்று முதல்வர் கருணாநிதிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 5, 6 மாவட்டங்களில் மட்டுமே பாமக இன்று வளர்ந்து நிற்கிறது. ஆனால், 40 தொகுதிகளில் இருக்கும் நாம், அங்கீகாரம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம். நமது கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications