2000 பேரை பணியமர்த்தும் டாடா டெக்னாலஜீஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்த ஆண்டுக்குள் 2 ஆயிரம் பேரை புதிதாக பணியமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, டாடா டெக்னாலஜிஸ் தலைவர் வாரன் ஹாரிஸ் கூறுகையில்,

"கடந்த காலங்களில் மிகுந்த இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆட்டோமேட்டிவ் துறை, தற்போது வளர்ச்சிப் பாதையில் திரும்பி வருகிறது. இதற்கு, கடந்த சில ஆண்டுகளில் இந்த பிரிவில் ‌அதிகளவில் முதலீடுகள் குவிந்து வருவதே சான்றாகும்.

இத்த‌கைய தருணத்தில், தங்கள் நிறுவனமும் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் களமிறங்கி உள்ளோம். தற்போதைய அளவில், தங்கள் நிறுவனத்தில் 4,250 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தங்கள் நிறுவனத்திற்கு, ஆட்டோமேட்டிவ் பிரிவின் மூலம் மட்டும் பெரும்பாலான வருவாய் வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்னும் 12 மாதங்களுக்குள், 2 ஆயிரம் பேரை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம்", என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+