பொள்ளாச்சி சிறையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம், 2 பேர் சிக்கினர்-3 வார்டன்கள் சஸ்பெண்ட்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சப்-ஜெயிலில் கழிப்பறை சுவற்றில் துளையிட்டு 4 கைதிகள் தப்பியோடிவிட்டனர். இதில் இருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இதையடுத்து சிறை வார்டன்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி சப்-ஜெயிலில் இருந்து இன்று அதிகாலை சையத் இப்ராஹிம் (21) , சதீஸ் (21), செல்வம் (19), கோமல் (20) ஆகியோர் இருக்கும் கழிப்பறை சுவற்றில் துளை போட்டு தப்பினர்.
தப்பியோடும்போது மற்ற கைதிகள் கூச்சலிட்டதையடுத்து அங்கு விரைந்த போலீசார் கோமல், சதீஸ் ஆகியோரை விரட்டிச் சென்று பிடித்தனர்.
சையத் இப்ராகிம் மற்றும் செல்வம் ஆகியோர் பிடிபடாமல் தப்பிவிட்டனர்.
இவர்களில் 3 பேர் திருட்டு வழக்கில் கைதானவர்கள், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த கோமல் கொலை வழக்கில் கைதானவன் ஆவான்.
இவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கைதிகள் தப்பியதையடுத்து சிறை வார்டன்கள் 3 பேரை சஸ்பெண்ட் செயது சிறைத்துறை டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications