தூத்துக்குடி-கொழும்பு தோணி போக்குவரத்து துவங்கியது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு 3 ஆண்டுகளுக்கு பி்ன்னர் தோணி மூலம் சரக்கு போக்குவரத்து இன்று தொடங்கியது.
தூத்துக்குடியில் இருந்து காய்கறிகள், உப்பு , நாட்டு மருந்துகள், வத்தல், பூண்டு, உருளைக்கிழங்கு, கருவாடு, பீடி, இலைகள் உள்ளிட்ட பொருட்கள் தோணிகள் மூலம் கொழும்பு, மாலத்தீவு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. இதுபோல அங்குள்ள பழைய இரும்பு பொருட்கள் தூத்துக்குடிக்கு தோணி மூலம் கொண்டு வரப்பட்டன.
தற்போது மாலதீவுக்கு மட்டும் தூத்துக்குடியில் இருந்து இருமாதங்களுக்கு ஒரு முறை 40க்கும் மேற்பட்ட தோணிகளில் சரக்கு ஏற்றி செல்லப்படுகிறது. ஆனால் தற்போது வெரும் 6 தோணிகளில் மட்டுமே சரக்கு போக்குவரத்து நடக்கிறது.
சரக்கு கப்பல்கள் மூலம் இலங்கைக்கு சரக்குகள் அனுப்பப்பட்டதாலும், இலங்கையில் நிலவிய போர் சூழல் மற்றும் அங்குள்ள அரசின் நிலைப்பாடு ஆகிய காரணங்களால் இலங்கைக்கு தோணிகளில் சரக்குகள் கொண்டு செல்லப்படுவது படிப்படியாக குறைந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் தோணி தொழிலை நம்பியிருந்த பல குடும்பங்கள் நலிவுற்றன.
இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி- கொழும்பு இடையே தோணி மூலம் சரக்குக்கள் அனுப்பும் பணிகள் இன்று காலை தொடங்கியது. மஞ்சள், புளி, வத்தல் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு எம்எஸவி ராஜ் என்ற தோணி கொழும்புவுக்கு புறப்பட்டு சென்றது.
தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தோணி 20 முதல் 22 மணி நேரத்திற்குள் கொழும்பு சென்றடையும் எனவும், இந்த தோணி போக்குவரத்து வாரம் ஒருமுறை நடைபெறும் என்றும் தோணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications