காஷ்மீரை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 'பிரித்துக் கொடுத்த' கட்சி!
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தை மூன்று பாகமாகப் பிரித்து, ஒன்றை இந்தியாவுக்கும், மீதி இரண்டு பாகங்களை பாகிஸ்தான் மற்றும் காஷ்மீருக்கும் 'பங்கிட்டுக்' கொடுத்துள்ளது அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி.
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவுக்கு தீராத தலைவலியாக இருந்து வருகிறது. காஷமீரின் மேற்குப் பகுதியை பாகிஸ்தானும், கிழக்கு மற்றும் வடக்கின் ஒரு பகுதியை சீனாவும் சர்வதேச சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளன. இந்தப் பகுதிகளை மீட்கவேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக உள்ளது. ஆனால் பாகிஸ்தானும் சீனாவும் ஒட்டுமொத்த காஷ்மீரையும் துண்டாடி, இந்தியாவிலிருந்து பிரிப்பதை குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றன.
பாகிஸ்தான் இதற்காகவே பல தீவிரவாதப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இப்போது காஷ்மீரின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இந்திய கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், அவற்றின் மீது இந்தியாவுக்கான உரிமை சர்வதேச அளவில் யாரும் கேள்வி எழுப்ப முடியாததாக உள்ளது.
காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளும் இந்தியாவுக்கு சொந்தமானவையே என்ற உரிமையை நிலைநாட்ட வேண்டிய தருணத்தில், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய கட்சியே, இந்த இரு பகுதிகளையும் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது, வரைபட வடிவில்.
காஷ்மீர் தொலைநோக்குப் பார்வை என்ற பெயரில் காஷ்மீர் மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ள ஒரு வரைபடத்தில் இம்மாநிலத்தின் மேற்குப் பகுதி பாகிஸ்தானுக்குச் சொந்தமானதென்றும், கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகள் சீனாவுக்கு சொந்தமானதென்றும் பாகம் பிரித்துக் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, சீனாவின் யார்க்கண்ட் நகரோடு காஷ்மீரின் ஸ்ரீநகர் இணைக்கப்பட வேண்டுமென்றும், காரகோரம் கணவாய் வழியாக புதிய ரயில்பாதை அமைக்கப்பட்டு சீனாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் அந்த வரைபடத்துடன் வழங்கப்பட்ட குறிப்பில் தெரிவித்துள்ளது அக்கட்சி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்கெனவே சீனா 7000 மெகாவாட் திறன்கொண்ட மின்திட்டத்தைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் காஷ்மீரின் வடக்குப் பகுதியான கில்ஜிட்டுக்கு இப்போது கில்ஜிட் - பல்டிஸ்தான் என்று பெயர் சூட்டி தனி மாநில அந்தஸ்து கொடுத்துள்ளது பாகிஸ்தான். இந்த 'மாநிலத்தின்' முதல்வராக தேர்வு பெற்றுள்ள மெஹ்ந்தி ஷா, காஷ்மீருக்கும் கில்ஜிட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறிவருகிறார்.
ஆனால் நடக்கும் அத்தனை விஷயங்களையும் கைகட்டி அமைதியாக வேடிக்கைப் பார்த்து வருகிறது இந்திய அரசு.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications