ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்த அமைச்சர் மைதீன் கானின் சகோதரர்
சென்னை: தமிழக சுற்றுசூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன் கானின் சகோதரர் டிபிஎம் முகமது இக்பால் அதிமுகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று காலை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டிபிஎம் மைதீன்கானின் உடன்பிறந்த சகோதரர் டிபிஎம் முகமது இக்பாலும், அவரது குடும்பத்தினரும் நேரில் சந்தித்து தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அப்போது அதிமுகவின் ஜெயலலிதா பேரவை செயலாளர் நைனார் நாகேந்திரன் உடன் இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு:
இதற்கிடையே இந்திய தேசிய லீக் கட்சியின் புதிய தலைவராக அப்துல்லா சுலைமான் சேட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில், கட்சியின் தலைவராக இருந்த முகமது சுலைமான் சாகிப் நீக்கப்பட்டு, அப்துல்லா சுலைமான் சேட் ஏகமனதாக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜகிருத்தீன் அகமது விடுத்துள்ள அறிக்கையில்,
புதிய தலைவர் அப்துல்லா சுலைமான் சேட், பொதுச் செயலாளர் சிராஜ் இப்ராகிம் சேட் அறிவுறுத்தலின்படி இந்திய தேசிய லீக்கின் தமிழகக் கிளை,வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தரும், இக்கூட்டணியின் வெற்றிக்கு தொடர்ந்து பாடுபடும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications