பாலஸ்தீன அமைச்சரவை திடீர் ராஜினாமா!
ரமல்லா: பிரதமர் சலாம் பயாத் தலைமையிலான பாலஸ்தீன அமைச்சரவை திடீரென இன்று ராஜிநாமா செய்தது. தனது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை அதிபர் மெஹ்மூத் அப்பாஸிடம் பயாத் இன்று காலை வழங்கினார்.
வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள ரமல்லா நகரில் இன்று அதிகாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டது.
வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தில் அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அதிபருக்கு கெடு விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதமே பொதுத் தேர்தலை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ஹமாஸ் இயக்கத்தின் மிரட்டலால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக கடந்த நவம்பரில் அதிபர் அப்பாஸ் அறிவித்தார். ஆனால், துனிசியாவிலும் அதைத் தொடர்ந்து சூடான், எகிப்திலும் நடந்த மக்கள் புரட்சியால் அந்தத் திட்டமும் தாமதமாகி வந்தது.
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அரசியல் பிரிவான பதா இயக்கங்கள் இடையிலான மோதலால் பாலஸ்தீனத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தை ஆளும் அதிபர் அப்பாஸ் பதா இயக்கத்தைச் சேர்ந்தவர். ஆனால், நாட்டின் காஸா பகுதியை ஹமாஸ் அரசிடமிருந்து கைப்பற்றி ஆண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications