அழைத்தால் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்: இளங்கோவன் 'அந்தர் பல்டி'!
திருப்பத்தூர்: திமுகவினர் என்னை அழைத்தால் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வேன் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், வேலூர் மேற்கு மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு தலைவர்கள் மற்றும் பொறுப்பாளராக சிலரை மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் விதிமுறைகளுக்கு எதிரானது. குலாம் நபி ஆசாத்திடம் பேசி விட்டேன்.
வேலூர் மேற்கு மாவட்ட தலைவராக பாலூர் சம்பத், திருவாரூர் மாவட்ட தலைவராக துரை வேலு மற்றும் இப்போதைய நிர்வாகிகள் தொடர்ந்து நீடிப்பார்கள். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் தங்கபாலு மீது மேலிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார்
கேள்வி: காங்கிரஸ் தொகுதி உடன்பாடு குழுவில் உங்களை சேர்க்காதற்கு தி.மு.கவின் நிர்பந்தம் தான் காரணமா?
பதில்: அது குறித்து மேலும் பேச விரும்பவில்லை.
கேள்வி: தி.மு.க. அரசை கடுமையாக விமர்ச்சித்த நீங்கள் இப்போது மீண்டும் அந்த கட்சிக்கு எப்படி ஓட்டு கேட்பீர்கள்?
பதில்: ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி வந்தேன். அவ்வளவுதான்.
கேள்வி: இப்போது தவறுகள் சரி செய்யப்பட்டு விட்டது என்றா பிரசாரம் செய்வீர்கள்?
பதில்: ஆட்சியில் நடந்த நல்ல திட்டங்கள் குறித்து பேசுவேன்.
கேள்வி: தி.மு.க. அரசின் நல்ல திட்டங்கள் என்னென்ன?
பதில்: இலவச டி.வி., ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மருத்துவ காப்பீடு, மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் திட்டம், மத்திய அரசு குழு நிதியுடன் கான்கிரீட்ட வீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் உட்பட்ட திட்டங்களை பிரசாரம் செய்வேன்.
கேள்வி: கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வீர்களா?
பதில்: அழைப்பு அமைந்து மேலிடம் கூறினால் கலந்து கொள்வேன்.
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையுமா?
பதில்: எனக்குத் தெரியாது.
கேள்வி:- தி.மு.க. பொதுக்குழுவில் கருணாநிதி பேசும் போது பா.ம.கவை நம்பிக்கைத் துரோகி என்றும் கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்றும் சோனியா காந்தி சொன்னதாக கூறிள்ளாரே?
பதில்:- சோனியா நாகரிகம் தெரிந்தவர். அப்படி பேசி இருக்க வாய்ப்பில்லை. அப்படியே பேசி இருந்தாலும் அதை வெளிப்படையாக கருணாநிதி கூறியது நாகரீகமானது அல்ல.
கேள்வி: தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா?
பதில்: காங்கிரஸ் இருக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications