ஸ்பெக்ட்ரம்-ராசாவின் சிபிஐ காவல் மேலும் 3 நாள் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

Raja
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் சிபிஐ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வாவின் காவலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட ராசாவை 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க கடந்த 3ம் தேதி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது. 5 நாள் விசாரணை முடிவடைந்ததையடுத்து 8ம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ராசா.

அப்போது ராசாவிடம் மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவரை மேலும் 5 நாட்கள் தங்கள் காவலில் அனுப்புமாறு சிபிஐ கோரியது. இதையடுத்து ராசாவிடம் மேலும் 2 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து ராசா மீண்டும் சிபிஐ அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.

இந் நிலையில் இன்று அவரது காவல் முடிவடைந்ததையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், ராசா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவரது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்தது.

சிபிஐயின் கோரிக்கையை ஏற்று அவரது காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

அதே போல பல்வாவும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவரது காவலையும் நீடிக்க வேண்டும் என சிபிஐ கோரியதால் அவரது சிபிஐ காவல் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+