காதலர் தினம்-குமரி கடற்கரை, சுற்றுலா தலங்களில் குவிந்த ஜோடிகள் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: காதலர் தினத்தையொட்டி குமரி கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களில் இன்று இளம்ஜோடிகள் குவிந்தனர்.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுற்றுலா தலங்கள், கடற்கரையில் இளம் ஜோடிகள் குவிந்தனர். தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து அட்டை, ரோஜா பூ உள்ளிட்டவற்றை காதல் ஜோடிகள் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. குறிப்பாக கடற்கரை பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஜோடிகள் உலா வந்த வண்ணம் இருந்தனர். காலை முதலே பல்வேறு இடங்களில் இருந்து வந்து குமரியில் குவிந்தனர். கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை பீச், சங்குதுரை, வட்டகோட்டை, முட்டம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் உலக்கை அருவி, மாத்தூர், தொட்டியம், காளிகேசம் உள்ளிட்ட இடங்களி்ல் காதல் ஜோடிகள் புத்தாடை அணிந்து காதலர் தினத்தை கொண்டாடினர். காதல் ஜோடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என பல அமைப்புகள் அறிவித்திருந்ததால் விபரீதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் இதுபோன்று காதல் ஜோடிகள் வரும் 25 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+