பிப்ரவரி 28ம் தேதி மத்திய பட்ஜெட், 25ல் ரயில்வே பட்ஜெட்
டெல்லி: 2011-12ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 28ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன் 25ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் உரையுடன் கூட்டம் தொடங்கும்.
இந்தக் கூட்டத் தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். முதலில் பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 16ம் தேதி வரையும், அடுத்த கட்டமாக ஏப்ரல் 4ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரையும் நடக்கும்.
இந் நிலையில் அவையில் ஜனாதிபதி ஆற்ற வேண்டிய உரைக்கு மத்திய அமைச்சரவை நேற்றிரவு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உரை படித்துப் பார்க்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது.
அதே நேரத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை அமைதியாக நடத்த விட வேண்டுமானால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
அவையை அமைதியாக நடத்த இந்தக் கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி அதன் பின்னர் கூட்டுக் குழு விசாரணை குறித்து முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு கூற ஆரம்பித்துள்ளது.
இதனால் பட்ஜெட் கூட்டத் தொடர் அமைதியாக நடக்குமா என்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. கடந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்க் கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றமே இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications