For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்பிரமணிய சாமிக்கு அதிகபட்ச பாதுகாப்பு தர ஆர்எஸ்எஸ், விஎச்பி கோரிக்கை

By Chakra
Google Oneindia Tamil News

Subramanian Swamy
சென்னை: ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்குமாறு விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.அருணாசலம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்.விட்டல், பி.எஸ்.ராகவன், வி.சங்கரன், வி.சுந்தரம், முன்னாள் ராணுவ அதிகாரிகள் டி.அனந்தாசாரி, எஸ்.ராஜன், வி.ஆர்.பி.சாரதி, எச்.பாலகிருஷ்ணன், சரஸ்வதி ஆராய்ச்சி மையத்தின் எஸ்.கல்யாணராமன், விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் எஸ்.வேந்தாந்தம், ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி கே.சூரியநாராயணராவ், இந்து முன்னணி தலைவர் ஆர்.ராமகோபாலன், ஜனதா கட்சித் மாநில தலைவர் சந்திரலேகா ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நேர்மை, நாணயம், ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவை ஆட்சியிலும், சமூகத்திலும் நிலைக்க வேண்டும் என்பதற்காக சுப்பிரமணிய சாமி தளராத முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். தமிழகம் தேர்தலை சந்திக்கவிருக்கும் இத்தருணத்தில் சிலர் அவரது கொடும்பாவியை எரித்தனர்.

அவர் மீதும், அலுவலகம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மிரட்டல்கள் வந்துள்ளன. எனவே நாடு முழுவதும் சுப்பிரமணிய சாமிக்கு உயர்ந்தபட்ச மிகபலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

English summary
A group of intellectuals, including former Chief Justice of Madras High Court T S Arunachalam and former CVC N Vittal, have written to Prime Minister Manmohan Singh seeking steps to provide "highest security" to Janata Party president Subramanian Swamy. Maintaining that Swamy's efforts had led to "effective investigation" and judicial action in many cases of corruption, they said he was facing threat in Tamil Nadu. "As the state (Tamil Nadu) is getting ready for Assembly elections, some political activists have indulged in burning Swamy's effigies in many places. Some had made threatening remarks against him," the letter said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X