ஒரிசா கலெக்டரை மாவோயிஸ்ட்கள் கடத்தல் : சிறையில் இருக்கும் கூட்டாளிகளை விடுவிக்க நிபந்தனை
புவனேஷ்வர்: மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள மால்காங்கிரி மாவட்ட ஆட்சியரை மாவோயிஸ்ட்கள் கடத்தியுள்ளனர். அவர்கள் மத்திய படையை திரும்பப் பெற வேண்டும என்றும், கைது செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட்களை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைத்துள்ளனர்.
மால்காங்கிரி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. கிருஷ்ணாவையும்(30), ஜூனியர் பொறியாளர் ஒருவரையும் நேற்று மாலையில் இருந்து காணவில்லை. அவர்கள் சித்ரகோண்டா பகுதியில் நடக்கும் உள்ளுர் முன்னேற்ற முகாமை பார்வையிடச் சென்றபோது மாயமாகியுள்ளனர் என்று எஸ்பி அனிருத் சிங் தெரிவித்தார்.
ஆந்திர பிரதேச மாநில எல்லையோரம் உள்ள பாடபடா முகாமில் இருந்து மாவட்ட ஆட்சியர் 2 ஜூனியர் பொறியாளர்கள் மற்றும் இன்னொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பாலம் ஒன்றை பார்க்க புறப்பட்டார் என்று சித்ரகோண்டா தாசில்தார் டி. கோபால் கிருஷ்ணன் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
மாவட்ட ஆட்சியரும், ஒரு ஜூனியர் பொறியாளரும் மாயமாகிவிட்டனர். ஆனால் அவர்களுடன் சென்றிருந்த மற்ற இருவர் நேற்று நள்ளிரவில் பாடபடா முகாமிற்கு திரும்பினர். அவர்கள் கடிதம் ஒன்றை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதனை மாவோயிஸ்ட்கள் எழுதியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் இருந்து மத்திய படையை திரும்பப் பெறவேண்டும் என்றும், நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுவிக்க வேண்டும் என்று அதில் எழுதியிருந்தது. நாங்கள் அந்த கடிதத்தை ஆய்வு செய்து, நிலைமை குறித்து ஆலோசித்து வருகிறோம். அவரைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
மாவட்ட ஆட்சியரை மாவோயிஸ்ட்கள் தான் பணயக்கைதியாக பிடித்துக் கொண்டு போயிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம் என்று எஸ்பி சிங் தெரிவித்தார்.
இகு குறித்து டெல்லியில் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை தெரிவித்ததாவது,
மாவோயிஸ்ட்கள் கிருஷ்ணாவை கடத்தி அவர்கள் நிபந்தனைகளை ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுத்துள்ளனர். மாநில அரசும் மற்ற அதிகாரிகளும் இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த செயல் கண்டனத்திற்குரியது. கிருஷ்ணாவை காப்பாற்ற எந்த ஆப்ரேஷனும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். அவருக்கு உள்ளூரில் உள்ள ஆதரவும், மாநில அரசும் அவரை விடுவிக்கும் எனறு நான் நம்புகிறேன்.
அவரை விடுவிக்க ஒரு சில நாட்கள் ஆகும். ஆனால் உறுதியாக அவரை மீட்டுவிடுவோம் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications