நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்: ராசா
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நிரபராதி என்பதை சட்டரீதியாக நிரூபிப்பேன் என்று 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார்.
ராசாவின் 14 நாள் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதி சைனியிடம் ராசாவின் வழக்கறிஞர் ரமேஷ் குப்தா ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், திகார் சிறையில் ராசாவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை வழங்க அனுமதிக்க வேண்டும், புத்தகங்களை எடுத்துச் செல்லவும் ராசாவுக்கு அனுமதி தர வேண்டும்.
இந்தக் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு வீட்டு உணவே வழங்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய ராசா, நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நிரபராதி என்பதை சட்டரீதியாக நிரூபிப்பேன் என்றார்.
ராசா விரைவிலேயே ஜாமீன் கோரி மனு செய்வார் என்று தெரிகிறது. ஆனால் ராசாவை முதலில் தனது கஸ்டடியில் எடுத்தபோதே சிபிஐ தனது மனுவில் ராசாவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்ற கோரிக்கையையும் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை.
ராசா மீது மார்ச் மாதத்துக்குள் சிபிஐ குற்றப்பத்திரிகை தயார் செய்து தாக்கல் செய்ய முடியுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.
ராசாவிடம் இப்போதைக்கு தற்காலிகமாக விசாரணையை முடித்துள்ள சிபிஐ ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தவுள்ளது.
அந்த வகையில் இந்த நிறுவனங்களுக்கு உதவியாக செயல்பட்ட நிரா ராடியாவும் விரைவில் கைதாகலாம் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications