புதன்-முகூர்த்தம்-வளர்பிறை-பிரதோஷம்: சீட் கேட்டு மனு செய்ய அதிமுக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்

புதன்கிழமை, முகூர்த்த நாள், வளர் பிறை, பிரதோஷம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நேற்று பெரும் கூட்டம் கூடியது. இதன்மூலம் எதையும் நாள், நட்சத்திரம், கூட்டுத் தொகை பார்த்துச் செய்வதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 1,200 தேர்தலில் சீட் கேட்டு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்மூலம் அதிமுகவில் சீட் கேட்டுள்ளோர் எண்ணிக்கை 8,000த்தைத் தாண்டிவிட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் தங்களுடன் சேர்த்து ஜெயலலிதாவும் தங்கள் தொகுதியில் போட்டியிடக் கோரி மனு செய்தனர்.
பெரும் கூட்டம் கூடியதால் அதிமுக தலைமையகம் அமைந்துள்ள சென்னை ஒளவை சண்முகம் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அலுவலகத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனி வரிசைகள், கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்க நாளை (18ம் தேதி)(கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு உகந்த 9) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் இன்றும் பெரும் கூட்டம் கூடியது.
விருப்ப மனு தாக்கல் தேதி நீடிப்பு:
இந் நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன் பிறப்புகள் 5ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தலைமைக் கழகத்தில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பினை அடுத்து, கழக உடன்பிறப்புகள் கரைபுரண்டோடும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் தொடர்ந்து மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
16ம் தேதி வரை 8,616 மனுக்கள் பெறப்பட்டு, இதன் மூலம் வேட்பு மனுக் கட்டணமாக 8 கோடியே 54 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.
தற்போது, கழக உடன் பிறப்புகள் பலரும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவர்களுடைய வேண்டு கோளை ஏற்று, வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் கழக உடன்பிறப்புகள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வருகிற 23ம் தேதிமாலை 6 மணி வரை தலைமைக் கழகத்தில் பெற்று அவற்றை பூர்த்தி செய்து அளிக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications