ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு! - இது காங்கிரஸ் போராட்டம்!!

முகப்பேர் மேற்கு, அம்பத்தூர் பகுதி இளைஞர் காங்கிரசார் அங்குள்ள கிருஷ்ணா நகர் பெட்ரோல் பங்க் அருகே ஒன்று கூடினார்கள். பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை ஊர்வலமாக எடுத்துச் சென்று அவருக்கு எதிராகக் கோஷமிட்டனர்.
கலெக்டர் நகர் சிக்னல் அருகே வந்ததும் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். இலங்கைக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த போராட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பி.வி. தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் ஜாகீர் அப்பாஸ், அம்பத்தூர் நகர தலைவர் என்.கே. வேலாயுதம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பி.வி. தமிழ்ச்செல்வம் பேசும்போது கூறியதாவது:
"இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதி தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் பருத்திதுறை சிறையில் அடைத்துள்ளனர். இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர். இதில் படகுகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. 24 மீனவர் களை 7 படகுகளுடன் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்று விட்டனர். இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தி உள்ளோம்," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications