சென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் திடீர் மழை
சென்னை: சென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், திடீரென மழை பெய்ததால் மக்கள் குழப்பமடைந்தனர். அத்தோடு புழுக்கமும் அதிகமாகிப் போனது.
தமிழகத்தில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பனி குறைந்து விட்டது. சென்னையில் சுத்தமாக நின்று விட்டது. இது கோடை காலத் தொடக்கத்திற்கான அறிகுறியாகத் தெரிகிறது. பகல் முழுவதும் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. மாலைக்கு மேல் வெயில் குறைந்தாலும், புழுக்கம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2-3 நாட்களாக புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மழை வருமோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது.
இந்த நிலையில் இன்று பகலில் திடீரென கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இது சில இடங்களில் பெரிய மழையாக இருந்தது. அதேசமயம், பல இடங்களில் பெரிய மழையாக இல்லாமல் ஆங்காங்கே விட்டு விட்டு சாறல் போல இருந்ததால் மக்கள் குழப்பமடைந்தனர்.
வானத்தைப் பார்த்தால் வெயில் வெளுத்துக் கொண்டிருக்க, கீழே மழைத் துளிகள் விழுந்தது பார்க்கவே படு வித்தியாசமாக இருந்தது.
இருந்தாலும் இந்த மழை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சில நிமிடத் துளிகளே தூறி வி்ட்டுப் போய் விட்டது இந்த திடீர் மழை.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications