மதிமுகவுக்கு எத்தனை இடம்?-அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை: அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து மதிமுக மீண்டும் பேச்சு நடத்தியது.
அதிமுக தலைமையகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தைகளில் அக் கட்சியின் தேர்தல் பணிக்குழுவினரான முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் மதிமுக தேர்தல் குழுவைச் சேர்ந்த திருப்பூர் மாவட்டச் செயலாளர் மாரியப்பன், காஞ்சீபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, தலைமைக் கழக செய்தித் தொடர்பாளர் நன்மாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், அதிமுக குழுவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக 2வது முறையாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். இந்தப் பேச்சுவார்த்தை திருப்தியாக அமைந்தது. எங்களுடைய நிலைப்பாட்டை சொல்லி இருக்கிறோம். எங்களுடைய ஓட்டு மொத்த குறிக்கோள் திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மதிமுகவுக்கு எத்தனைத் தொகுதிகள் என்பதை இரு கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்வார்கள். இன்னும் சில கட்சிகள் இந்த அணிக்கு வர உள்ளனர் என்றார்.
முதல்கட்ட பேச்சுவார்த்தியின்போது அதிமுகவிடம் மதிமுக 39 தொகுதிகள் கேட்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்சிக்கு தேமுதிக வருகிறதா என்பதைப் பொறுத்து அதிமுக இடங்களை ஒதுக்கவுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், 36 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வைகோவுக்கு மிக மிகக் குறைவான ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications