மாறத் துடிக்கும் காங்கிரசார்: மாற்றுத் தொகுதி கிடைக்குமா?
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொகுதிகளை இழந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாற்று தொகுதிகளை கேட்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் ஐவர் குழுவை அமைத்துள்ளது. மத்திய அமைச்சர்களை உள்ளடக்கிய இக்குழுவினர் கடந்த இரு தினங்களாக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவருமே தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையே மீண்டும் கேட்டு மனு அளித்துள்ளனர். ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொகுதிகளை மீண்டும் கேட்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
சேரன்மகாதேவி, சாத்தான்குளம் உள்ளிட்ட தொகுதிகள் தற்போது தொகுதி மறுசீரமைப்பில் போய் விட்டது. சேரன்மகாதேவி தொகுதியில் உள்ள பகுதிகள் அம்பைக்கும், ஆலங்குளத்திற்கும் சென்று விட்டது. சாத்தான்குளம் தொகுதியின் பல பகுதிகளை ஸ்ரீவைகுண்டமும், திருச்செந்தூரும் சத்தமில்லாமல் விழுங்கி கொண்டு நிற்கின்றன. தொகுதிகளை இழந்த எம்எல்ஏக்கள் மாற்றாக எந்த தொகுதியை கேட்டு பெறுவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேரன்மகாதேவி தொகுதியை இழந்த வேல்துரைக்கு தற்போது அம்பை அல்லது நான்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளது.
ஆனால் அம்பை சபாநாயகர் தொகுதி என்பதாலும், நான்குநேரியில் ஏற்கனவே காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் இருப்பதாலும் வேறு தொகுதிக்காக அவர் போராட வேண்டியுள்ளது. சாத்தான்குளம் தொகுதி ராணி வெங்கடேசன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை கேட்டு பெற நினைக்கிறார். ஆனால் அங்கு இருப்பதும் காங்கிரஸ் சுடலையாண்டி எம்எல்ஏ என்பதால் வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் நடந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் குறைந்தது 10 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என மாவட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
1989-ம் ஆண்டில் காங்கிரஸ் தனித்து நின்றபோது நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளை கைப்பற்றியது. அதன் அடிப்படையில் இம்முறை கடையநல்லூர், நான்குநேரி தொகுதிகளோடு, வாசுதேவநல்லூர், ஆலங்குளம், ராதாபுரம் தொகுதிகளையும் கேட்க மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications