ஜேபிசியில் எல்லா கட்சிகளுக்கும் இடம்: அதிமுக கோரிக்கை
டெல்லி: 2ஜி விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமைக்கவிருக்கும் கூட்டுக் குழுவில் அனைத்து கட்சிகளும் இருக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படும் என்று நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். கூட்டுக குழு விசாரணை மட்டும் தான் வேண்டும் என்று இருந்த எதிர்கட்சிகள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்தன.
ஆனால் அந்தக் குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் இருக்கமாட்டார்கள் என்று தெரிகிறது. இதையடுத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட்டுக்குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
பாராளுமன்றத்தில் மொத்தம் 31 கட்சி பிரதிநிதிகள் இருக்கின்றனர். இதில் 21 பேர் மட்டுமே கூட்டுக் குழுவில் நியமிக்க காங்கிரஸ் திட்டமிட்டிரு்பபதாக கூறப்படுகிறது. 30 பேரையாவது கூட்டுக்குழுவில் நியமிக்க வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசியதாவது,
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொன்னவர் ஜெயலலிதா தான். அதனால் கூட்டுக்குழுவில் அனைத்துக் கட்சிகளும் இருக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் இது தொடர்பான தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இரு சபைகளிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகே கூட்டுக்குழு அமைக்கப்படும்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி











Click it and Unblock the Notifications