தேங்காய் ஏற்றுமதி: இலங்கையின் நஷ்டம் இந்தியாவுக்கு லாபம்!

இலங்கையில் தேங்காய் உற்பத்தி படுவீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உள்ளூர் தேங்காய் விலை மிகவும் அதிகரித்துவிட்டது. எனவே உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்த பிறகே, தேங்காய் ஏற்றுமதி குறித்து முடிவு செய்யப்படும் என்று இலங்கை அறிவித்துவிட்டது.
தேங்காய் ஏற்றுமதியில் உலகிலேயே முன்னணியிலிருப்பவை இந்தியாவும் இலங்கையும்தான். உலக நாடுகள் பலவும் இங்கிருந்துதான் தேங்காயைப் பெறுகின்றன. இலங்கையிலிருந்து தேங்காய் ஏற்றுமதியே இல்லை என்றாகிவிட்டதால், இந்தியாவின் தேங்காய்க்கு எக்கச்சக்க கிராக்கி.
எனவே இந்த ஆண்டு மட்டும் 30 சதவீத அளவு தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கும், மொரீஷியஸுக்கும் மட்டும் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் அளவை விட 50 சதவீதம் கூடுதலாக அனுப்பியுள்ளதாக தேங்காய் வளர்ச்சி வாரியம் அறிவித்துள்ளது.
உலகில் 86 நாடுகளில் தேங்காய் பயிராகிறது. ஆண்டுக்கு 54 பில்லியன் தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 13 பில்லியன் தேங்காய் இந்தியாவிலிருந்துதான் கிடைக்கிறது. குறிப்பாக தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம்தான் அதிக தேங்காய்களை உற்பத்தி செய்கின்றன.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications