ஏர் இந்தியா விமானிகள் 9-ந் தேதி ஸ்டிரைக்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஊதிய முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் மார்ச் 9-ந் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
அவர்கள் இடம்பெற்றுள்ள இந்திய வர்த்தக விமானிகள் சங்கம், ஏர் இந்தியா நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஜாதவிடம் நேற்று வேலை நிறுத்த நோட்டீசை அளித்துள்ளது.
அதே சமயத்தில், இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க, தலைமை தொழிலாளர் ஆணையரின் தலையீட்டை ஏர் இந்தியா நிர்வாகம் கோரியுள்ளது.
பயணிகளுக்கு மிகுன்த கஷ்டத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்குமாறு விமானிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications