திருப்பதியில் விஜயகாந்த் வழிபாடு-கூட்டணி குறித்துக் கேட்டதால் கோபம்!

தமிழக அரசியல் குழப்பங்களில் ஒன்றாக தேமுதிக மாறியுள்ளது. கூட்டணி வைக்க முடிவு செய்து விட்ட அந்தக் கட்சி யாருடன் கூட்டணி என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. அதேசமயம் அதிமுகவுடன் பலமான பேரத்தில் அது ஈடுபட்டு வந்தது, வருகிறது. அதேபோல காங்கிரஸுடனும் அது ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
மக்களுடன் மட்டுமே கூட்டணி, தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்த விஜயகாந்த், மற்ற அரசியல் கட்சிகளைப் போலதானும் தடம் மாறி விட்டார் என்ற போதிலும், இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் இழுபறியாகவே இருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று தனது உறவினர்களுடன் திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார் விஜயகாந்த். கோவிலில் சாமி கும்பிட்டு முடித்த பின்னர் வெளியே வந்த விஜயகாந்த்தை ஏராளமான ரசிகர்கள் அணுகினர். இதைப் பார்த்து விஜயகாந்த் டென்ஷனாகி விட்டார்.
அதேபோல அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடமும் அவர் சரிவரப் பேசவில்லை. கோபம் கலந்த முகத்துடனேயே அவர் காணப்பட்டார்.
யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறீர்கள் அல்லது சிரஞ்சீவி பாணியில் கட்சியைக் கலைத்து விடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கோபமடைந்த விஜயகாந்த், அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது. கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. முடிந்த பிறகு சொல்வேன் என்று கூறி விட்டு வேகமாக கிளம்பி விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications