விஜயகாந்த் கட்சிக்கு 48 இடங்கள்-ஜெயலலிதா சம்மதம்?

நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான தேமுதிக குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்களை மேற்கொண்டனர்.
ஒரு வழியாக அதிமுகவைத் தேடி தேமுதிக வந்ததைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்களும், கூடவே தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த அவர்கள் மகிழ்ச்சி கோஷங்களை எழுப்பினர்.
கிட்டத்தட்ட 75 நிமிடங்கள் பேச்சு நடந்தது. பின்னர் வெளியில் வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில்,
இரு கட்சிகளும் வரும் பேரவைத் தேர்தலை சந்திப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் முதல் சுற்று பேச்சு சுமுகமாக நடந்தது. மீண்டும் அடுத்த சுற்று பேச்சு விரைவில் தொடங்கும்.
தமிழக மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியில் திரட்டி, தேர்தலைச் சந்திக்க உள்ளோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில்தான், மக்களின் விருப்பப்படி அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர தே.மு.தி.க. முன் வந்தது. இது வெற்றிக் கூட்டணி.
எத்தனை தொகுதிகள் முக்கியம் என்பதைவிட, தி.மு.க.வை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதே லட்சியம்.
கூட்டணியில் இணைய வந்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் பரிசை அளித்துள்ளார்.
நாங்கள் ஆட்சியில் பங்கும் கேட்கும் திட்டத்தில் எல்லாம் இல்லை. தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்த பின்னர் ஜெயலலிதாவை, விஜயகாந்த் சந்திப்பார் என்றார்.
தேமுதிக 60 இடங்கள், ஆட்சியில் பங்கு, விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி, தேர்தலை சந்திக்க நிதியுதவி கேட்டு வந்ததால் தொகுதிப் பங்கீடு இழுத்துக் கொண்டே போனது.
ஆனால், அதிமுகவோ அதிகபட்சம் 31 இடங்கள் தருவதாகக் கூறி வந்தது. ஆட்சியில் பங்கு பற்றி தேர்தலுக்குப் பின் பேசலாம்.. துணை முதல்வர் பதவி எல்லாம் தர முடியாது என்றும் கூறிவிட்டது.
இதையடுத்து அப்படி இப்படி இழுத்தடித்த விஜய்காந்த் இறுதியாக 50 சீட்கள் தந்தால் ஓ.கே என்று கூறிவிட, 48 தருகிறோம் என்று சொல்லி தேமுதிகவை இழுத்துள்ளது அதிமுக.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications