தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு கருணாநிதி கடிதம

அந்தக் கடிதத்தில், கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 2.4.010ல் உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். இது சம்பந்தமாக நான் ஏற்கனவே 25.10.1996, 7.8.2006 ஆகிய தேதிகளிலும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். தமிழக அரசு இந்த பிரச்சனை தொடர்பாக பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் இன்னும் மத்திய அரசால் முறையான அனுமதி வரவில்லை.
தாழ்த்தப்பட்டோருக்கான அரசியல் சட்டம் 1950, அடுத்து 1956ல் வந்த சட்ட மாறுதல், 1976ல் வந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சட்ட திருத்தம் அனைத்திலும் தாழ்த்தப்பட்டோரை மதரீதியாக வித்தியாசம் பார்கக் கூடாது என்று உள்ளது. சீக்கிய கிறிஸ்தவர்களும், புத்தமத கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.
எந்த மதத்தில் இருந்தாலும் அனைத்து தாழ்த்தப்பட்டவர்களும் சமூக பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ளனர். எனவே அவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க உறுதியளித்து உள்ளது. 6-1-2011ல் சட்டசபை கவர்னர் உரையிலும் கிறிஸ்தவ மதத்துக்கு மாநில ஆதி திராவிடர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
21-2-2011ல் நடந்த உங்கள் (பிரதமர்) தலைமையில் நடந்த அமைச்சரவை அரசியல் விவகார கூட்டத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. எனவே நீங்கள் இதில் தலையிட்டு ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உரிய சட்டத்தை நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டு வந்து அரசின் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications