ராசாவின் உதவியாளர், பல்வாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் உதவியாளர், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் பல்வா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அதிகாரி சித்தார்த் பெகுரியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உசேன் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சந்தோலியா, சித்தார்த் பெகுரியா, பல்வா ஆகியோர் ஜாமீன் கோரி சிபிஐ தனி நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் சந்தோலியா, பல்வா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதி்ர்ப்புத் தெரிவித்தது.
சிபிஐ தாக்கல் செய்த பதிலில், பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தொலைத் தொடர்புத்துறையில் முன் அனுபவமே இல்லாதது. அதற்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல சந்தோலியா மீது முறைகேடான பண பரிமாற்றம் உள்பட பல்வேறு புகார்களுக்கு ஆதாரங்கள் சிக்கியுள்ளன. சில நிறுவனங்களுக்கு சாதகமாக அவர் செயல்பட்டுள்ளார், முன் தேதியிட்டு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் அவருக்கு தொடர்பு உள்ளது.
இந் நிலையில் இப்போது இவர்களை ஜாமீனில் விடுவித்தால் விசாரணைக்கு பிரச்சனை ஏற்படும் என்று சிபிஐ கூறியது.
இதையடுத்து இவர்கள் மீதான புகார்களுக்கு ஆதாரம் இருப்பதாக கூறிய நீதிபதி சைனி, இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications