காங்கிரஸ் சம தர்மம் இனிக்காது, பட்ஜெட்டும் மக்களுக்குப் பயன்படாது-விஜயகாந்த்
சென்னை: எனது ரத்தத்தில் காங்கிரஸும் கலந்திருக்கிறது என்று ஒரு காலத்தில் பேசி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது, காகிதப்பூ மணக்காது என்று டயலாக் விட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களுக்குப் பயன்படாது என்றும் பேசியுள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய பட்ஜெட் பாமர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக இல்லை. வசதி படைத்தோர் மீது வரி விதித்து, ஏழைகளுக்கு உதவி செய்யும் வகையில் இல்லை. இதற்கு நேர்மாறாக பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் நீடிக்கவே வழிவகை செய்கிறது.
விலைவாசி குறைப்பதற்கான உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அரசு அறிவித்த பலன் உண்மையான ஏழைகளுக்கு கிடைக்காது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆதாயம் அடைவதற்கு இந்த திட்டம் நடைமுறையில் பயன்படும்.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்ச ஊழல் போன்ற சமுதாயத்தை சீரழிக்கும் பிரச்சினைகளுக்கு எத்தகைய திட்டமும் அறிவிக்கப்படாமல் மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் நலிவடையச் செய்வதற்கே இந்த பட்ஜெட் பயன்படும்.
காகிதப்பூ மணக்காது, காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது. இந்த நிதிநிலை அறிக்கையும் ஏழைகளுக்கு பயன்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீட் கேட்டு அதிமுகவுடன் முன்பு ரகசியமாகவும், இப்போது வெளிப்படையாகவும் பேரத்தில் ஈடுபட்டுள்ளார் விஜயகாந்த். இந்த நிலையில், அவர், கடைசி நேரத்தில் காங்கிரஸுடன் சேர்ந்து தனிக் கூட்டணி காணலாம் என்று விஜயகாந்த் குறித்து பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது என்று விஜயகாந்த் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications