பண்ருட்டி ராமச்சந்திரனிடம் சீட் கேட்டு விருப்பமனு கொடுத்த விஜயகாந்த்
சென்னை: தேதிமுக சார்பில் விருப்பமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் ஆளாக, கட்சித் தலைவர் விஜயகாந்த் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் சீட் கேட்டு விருப்ப மனுவைக் கொடுத்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் தேர்தல் பணியில் படு பிசியாக இருக்கின்றன. இதறஅகு தேமுதிகவும் விலக்கல்ல.
தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் மார்ச் 2-ம் தேதி முதல் விருப்பமனுக்கள் கொடுக்கலாம் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. எப்பொழுது இந்த அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.
தமிழ்நாட்டில் பொது தொகுதிகளுக்கான விண்ணப்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும், தனி தொகுதிகளுக்கான விண்ணப்பங்களுக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புதுச்சேரியில், பொது தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.2,500 மும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
விருப்பமனுக்களை வாங்குவதற்கென்று தேமுதிக ஒரு குழு அமைத்துள்ளது. அதில் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உள்ளனர்.
விருப்பமனுக்கள் கொடுப்பதற்காக கட்சியினர் குவந்தாலும் நான் தான் முதலில் கொடுப்பேன் என்று கட்சி தலைவர் விஜயகாந்த் தனது விருப்பமனுவை அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் வழங்கினார். இதையடுத்து தான் மற்றவர்கள் மனு அளித்தனர்.
கருப்புக் கண்ணாடிக்கு மாறிய விஜயகாந்த்!
கருப்பு எம்.ஜி.ஆர். என்று விஜயகாந்த்தை அவரது கட்சியினர் செல்லமாக அழைக்கின்றனர். அதை நிரூபிப்பது போல இப்போதெல்லாம் கருப்புக் கண்ணாடி அணிந்தபடி கலக்கி வருகிறார் விஜயகாந்த். அந்த வகையில் நேற்றும் கருப்புக் கண்ணாடி அணிந்து அவர் வந்திருந்தார். அவரை தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications