அமெரிக்காவோ ஐநாவோ தலையிட்டால் ரத்த ஆறு ஓடும்-கடாபி
ட்ரிபோலி: லிபியாவில் நடப்பது வன்முறையாளர்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்சினை. இதை நானே பார்த்துக் கொள்வேன். இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளோ அல்லது அவர்களின் கைப்பாவையான ஐநா சபையோ தலையிட்டால் ரத்த ஆறு ஓடும் என எச்சரித்துள்ளார் லிபிய அதிபர் கர்னல் மொம்மர் கடாபி.
லிபியாவில் அரசுக்கு எதிராக கிளம்பியுள்ள போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. சபை அதிபர் கடாபிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல அமெரிக்கா மற்றும் பிரிட்டனும் எச்சரித்து உள்ளன.
பொதுமக்கள் மீது குண்டு வீசும் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பிரிட்டன் எச்சரித்தது.
அமெரிக்கா லிபியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை லிபியாவை சுற்றி நிறுத்தி உள்ளது. இதனால் அதிபர் கடாபி கடும் கோபம் அடைந்துள்ளார்.
மேற்கு நாடுகளுக்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், லிபியாவில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா.சபைக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே லிபியாவுக்கு எதிராக ஐ.நா. நடந்து கொள்கிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கைப்பாவையாகவே ஐநா நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது. ஐ.நா. சபையோ அல்லது மேற்கு நாடுகளோ லிபியா விவகாரத்தில் தலையிட்டால் நிலைமை விபரீதமாகி விடும்.
அவர்கள் எங்கள் மண்ணுக்குள் கால் வைத்தால் லிபியாவில் ரத்த ஆறு ஓடும். எங்களுக்கு எதிராக இருக்கும் கடைசி மனிதரையும் கொல்வோம், என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications