தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் பாஜக புகார்!

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி, தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை சந்தித்து பேசினார்கள்.
அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் மனித உரிமையை மீறிய செயல் என்றும், இதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மனு ஒன்றை கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்காரி, "கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இது மனித உரிமைகளை மீறும் செயல் ஆகும். இந்த சம்பவங்கள் கவலை அளிக்கின்றன.
ஆனால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும் என்று மனித உரிமை கமிஷன் தலைவரிடம் கேட்டுக் கொண்டோம்.
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்," என்றார்.
தமிழக பாஜக தலைவர் பொன் ராதா கிருஷ்ணனும் அப்போது உடனிருந்தார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications