ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொல்வதா? - எஸ்வி சேகருக்கு இளைஞர் காங்கிரஸ் கண்டனம்
சென்னை: சோனியாவை வசைபாடும் ஜெயலலிதாவுக்கு எஸ் வி சேகர் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லலாமா? என்று கண்டனம் தெரிவித்துள்ளது இளைஞர் காங்கிரஸ்.
இதுதொடர்பாக சென்னை மயிலாப்பூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரசுக்கு வந்த பிறகும் தன் சுபாவத்தை மாற்றவில்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியாவை தினசரி வசைபாடுவதையே வேலையாகக் கொண்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஆனால் அந்த ஜெயலலிதாவுக்கு இன்டர் நெட், பேஸ் புக் மூலம் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறார் எஸ் வி சேகர். ஆனால் இதே சேகர், சோனியா, நமது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்றோருக்கு பிறந்த நாள் வந்த போது வாழ்த்துச் சொல்லவுமில்லை.
இப்படி எதிர் வீட்டை எட்டி பார்க்கும் செயலை எஸ்.வி. சேகர் தொடர்வதைக் கண்டிக்கிறோம். காங்கிரஸ் வளர்ச்சிதான் முக்கியம் என்பதை அவர் உணர வேண்டும், என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications