For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணி: மதிமுக-18, சிபிஎம்-13, சிபிஐ-10?

Google Oneindia Tamil News

Tha.Pandian, Vaiko and GR
சென்னை: அதிமுக கூட்டணியில் மிச்சமுள்ள மதிமுக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக, ஜெயலலிதாவுக்கு தீவிர விசுவாசமாக உள்ள வைகோவின் மதிமுகவுக்கு வெறும் 18 தொகுதிகளையே தர ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 தொகுதிகளும், சிபிஐக்கு 10 தொகுதிகளும் தரப்படும் என்றும் கூறப்படுகிறது.

நேற்று வந்த விஜயகாந்துக்கு முதல் ஆளாக 41 தொகுதிகளைத் தூக்கிக் கொடுத்து விட்டார் ஜெயலலிதா. மேலும், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளை ஓரம் கட்டி வைத்தார். இதனால் இந்த மூன்று கட்சிகளும் பெரும் கவலையில் ஆழ்ந்தன. காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் இவர்கள் மூவரையும் தள்ளி வைத்திருந்தார் ஜெயலலிதா.

ஆனால் கடைசி நேரத்தில் ஜெயலலிதா நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டன காங்கிரஸும் திமுகவும். இதையடுத்து நேற்று சிபிஎம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிமுக, ஹோட்டலில் வைத்து அவர்களுடன் பேசியது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் நேற்று அதுகுறித்து அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், சிபிஐ, மதிமுக ஆகியோரைக் கூப்பிடாமலேயே அவர்களுக்கான தொகுதிப் பங்கீட்டையும் அதிமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இன்று இவை குறித்த முறையான அறிவிப்பை அதிமுக வெளியிடலாம் என்று தெரிகிறது.

அதிமுக தலைமைக் கழக வட்டாரத் தகவல்களின்படி மதிமுகவுக்கு 18, சிபிஎம்முக்கு 13, சிபிஐக்கு 10 தொகுதிகள் என தீர்மானமாகியுள்ளதாம். தொகுதிகள் எவை என்பதும் கூட முடிவாகி விட்டதாம். இன்று அல்லது நாளை கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அதிமுக அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
ADMK has finalised its seat sharing talks with Alliance parties it seems. According to the informations, MDMK may get 15 seats. CPM will be given 13 seats, whils 10 seats may be allocated to CPI. ADMK high command may release the list by today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X