திமுக-விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது
சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடக் கோரி விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று காலை நேர்காணல் தொடங்கியது.
திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி பல ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான இந்த நேர்காணல் குழுவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தினசரி காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது.
முதல் நாளான இன்று காலை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.
தொகுதியில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு, கட்சிக்கு ஆற்றிய பணிகள், செலவு செய்யக் கூடிய அளவு, வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் விசாரிக்கப்பட்டது.
இன்று மாலை விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து விருப்ப மனு செய்துள்ளவர்களிடம் நேர்காணல் நடைபெறும்.
நேர்காணல் நடைபெறும் நாட்கள், மாவட்டங்கள் விவரம்:
மார்ச் 9 - சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், ஈரோடு (காலை)
நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர் (மாலை)
மார்ச் 10 - புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி (காலை)
கரூர், பெரம்பலூர், அரியலூர் (மாலை)
மார்ச் 11 - நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சை, கடலூர் (காலை)
விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி வடக்கு, தர்மபுரி தெற்கு (மாலை)
மார்ச் 12 - திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் (காலை)
திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை (மாலை)
மார்ச் 13 - புதுச்சேரி மற்றும் காரைக்கால்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications