புறநகர் ரயில்களில் மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட் : மம்தா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஒரு சிறப்பு மகளிர் தின பரிசு அளித்துள்ளார். இனி புறநகர ரயில்களில் அனைத்து மாணவிகளுக்கும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்பது தான் அந்த பரிசு.
2011-2011-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடந்தது.
அதன் முடிவில் பேசிய மம்தா கூறியதாவது,
கல்லூரி வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.
பெண்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் மையங்கள் நிறுவப்படும் என்று அறிவித்தார்.
இதன் பிறகு ரயில்வே பட்ஜெட்டுக்கு மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியது. ஏற்கெனவே மக்களவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டது.












Click it and Unblock the Notifications