புதுவை... அதிமுகவுடன் கைகோர்க்கிறார் ரங்கசாமி?

தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்ற தேர்தல்களில் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
அதிமுக - தேமுதிக மற்றும் மதிமுக உள்ளிட்டவை தனி அணியாகக் களம் காணுகின்றன.
காங்கிரஸிலிருந்து விலகி, புதிதாக என் ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் என் ரங்கசாமி, இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பித்ததுமே அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரை சந்தித்து கூட்டணி அமைக்கவும், முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்கவும் சம்மதம் தெரிவித்தனர்.
தற்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சி பெயருக்கான அங்கீகாரத்தை பெறும் முயற்சியில் ரங்கசாமி தீவிரமாக உள்ளார். இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அனேகமாக இன்றுமாலை என்.ஆர். காங்கிரஸ் கட்சி பெயருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விரைவில் ரங்கசாமி சந்திக்கிறார். அப்போது என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் புதுவையில் கூட்டணி அமைவது உறுதிப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
கூட்டணியில் அதிக அளவிலான தொகுதிகளை என்.ஆர்.காங்கிரசுக்கு அதி.மு.க. அணி விட்டுக் கொடுக்கும் என்றும் மீதமுள்ள தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் போட்டியிடும் என்றும் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications