சாதனை சக்கரவர்த்தி ஃபிகோ மெக்சிகோவுக்கு ஏற்றுமதி: ஃபோர்டு

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஃபிகோ ஹேட்ச்பேக் காரை ஃபோர்டு நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தைப்படுத்தியது.
ஃபிகோ காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. ஃபிகோ கார் விற்பனையில் சூடு பறக்கிறது. மேலும், 10க்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல் விருதுகளை வென்ற முதல் இந்திய கார் என்ற பெருமையையும் ஃபிகோ பெற்றுள்ளது.
ஃபிகோ கார் அறிமுகப்படுத்தப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி, டெல்லியில் ஃபோர்டு நிறுவனத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் போனிஹாம் கலந்துகொண்டார்.
அப்போது மைக்கேல் போனிஹாம் கூறியதாவது:
"ஃபிகோவுக்கு கிடைத்த வரவேற்பு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டுக்குள் 75,000 என்ற எண்ணிக்கையை கடந்து ஃபிகோ சாதனை படைத்துள்ளது. எங்கள் நிறுவனத்தின் இந்திய வரலாற்றில் இல்லாத அளவு ஜனவரி மாத விற்பனை முதன்முறையாக 10,000 என்ற புதிய எண்ணிக்கையை கடந்துள்ளது.
உள்நாட்டு சந்தை மட்டுமின்றி தென் ஆப்பிரிக்கா மற்றும் நேபாளத்திற்கு ஃபிகோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மெக்சிகோ நாட்டுக்கு விரைவில் 1,500 ஃபிகோ கார் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. மேலும், வட ஆப்பிரிக்கா, கரிபியன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஃபிகோவை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
ஃபிகோவை வெளிநாட்டில் தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2,00,00 கார்கள் உற்பத்தி செய்ய முடியும்," என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications