ஒரே மேடையில் ஜெ., விஜயகாந்த், விஜய்... எஸ் ஏ சி ஏற்பாடு!!

திரைத்துறையில் இப்போதைக்கு ஜெயலலிதாவின் அதி தீவிர ஆதரவாளர் என்றால் அது இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன்தான் எனும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
அவரது மகனும் நடிகருமான விஜய் வெளிப்படையாக இதுவரை அதிமுக குறித்தோ, தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவான பிரச்சாரம் குறித்தெல்லாம் பேசவில்லை.
ஆனாலும், விஜய் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சீட் வாங்கித் தரும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் எஸ் ஏ சந்திரசேகரன். அநேகமாக அவர்களுக்கு 3 தொகுதிகளை அதிமுக ஒதுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுக்கோட்டை தொகுதியில் எஸ் ஏ சந்திரசேகரனே போட்டியிடுகிறார் அதிமுக ஆதரவுடன்.
இந்த நிலையில், மகன் விஜய்யையும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் அமரவைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
தான் இயக்கிவரும் "சட்டப்படி குற்றம்" படம் முடியும் தருவாயில் இருப்பதால் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை சென்னையில் இதுவரை யாரும் செய்யாத அளவு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த விழாவில் கலந்துகொண்டு பாடல் சிடியை வெளியிடுமாறு ஜெயலலிதாவுக்கு எஸ்ஏசி வேண்டுகோள் விடுக்க, அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
முதல் சிடியை ஜெயலலிதா வெளியிட, பெற்றுக் கொள்கிறார் தேமுதிக தலைவரும் அதிமுகவின் கூட்டணி தோழருமான விஜயகாந்த்.
இந்த விழாவிற்கு தமிழகம் முழவதிலும் உள்ள விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா உள்பட பிற மாநிலங்களிலும் உள்ள விஜய் ரசிகர்களை அழைத்துள்ளார் எஸ் ஏ சி. கூடவே அதிமுகவினரும் குவியப் போகிறார்களாம்.
நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது தீவுத்திடலில் இந்த விழாவை பெரும் மாநாடு போல நடத்தவிருக்கிறார்களாம்.
திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால், அதிமுக-தேமுதிக-விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றின் முதல் தேர்தல் பிரச்சார மேடையே இதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு












Click it and Unblock the Notifications