நட்சத்திரம் சின்னம் கோரி விடுதலை சிறுத்தைகள் வழக்கு: சிலிண்டர் சின்னம் கோரும் கொ.மு.க

இந்தக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது நட்சத்திரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற குறைந்தது 7 சட்டசபை தொகுதிகள், அல்லது 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் நிரந்தர சின்னம் கிடைக்கும்.
ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மட்டுமே சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
விழுப்புரம் தொகுதியில் 2,700 ஓட்டு வித்தியாசத்தில் அக்கட்சி தோல்வியடைந்தது.
இதனால் கட்சிக்கு தேர்தல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந் நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் நட்சத்திரம் சின்னத்திலேயே போட்டியிட அக்கட்சி விரும்புகிறது. தங்களுக்கு அந்த சின்னத்தை ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் நட்சத்திரம் சின்னம் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சிலிண்டர் சின்னம் கோரும் கொங்குநாடு முன்னேற்ற கழகம்:
அதே போல திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு முன்னேற்ற கழகம் தனக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளது.
இந்தக் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக இந்தக் கட்சி அறிவித்துவிட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 6 லட்சம் வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது.
இந் நிலையில் சட்டசபை தேர்தலிலும் அதே சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது.
கொ.மு.க. போட்டியிடும் 7 தொகுதிகளிலும், சிலிண்டர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அக் கட்சியின் பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications