12 மாவட்ட திமுக வேட்பாளர்களைத் தேர்வு செய்ய நேர்காணல் முடிந்தது
சென்னை: 12 மாவட்டங்களுக்கான நேர்காணலை திமுக நடத்தி முடித்து விட்டது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் திமுக சார்பில் நேர்காணல் நடந்து வருகிறது. காலையும், மாலையும் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, சேலம், நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்கங்களுக்கான நேர்காணல் முடிவடைந்தது.
நேர்காணலில் சில அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். நேற்றைய நேர்காணலின்போது பிரபல அரவாணி கல்கி கலந்து கொண்டார்.இவர் பொள்ளாச்சி தொகுதிக்கு போட்டியிட சீட் கேட்டுள்ளார். இவருக்கு சீட் கிடைக்கும் என்ற பலமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரவாணிகள் நல வாரியம், அரவாணிகள் தினம் உள்ளிட்ட திமுக அரசின் அறிவிப்பாலும், அரவாணிகளுக்கு தரப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளாலும் அரவாணிகள் மத்தியில் திமுகவுக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது. எனவே கல்கிக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
நேர்காணலைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தொகுதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிடும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications