குடிபோதையில் தகராறு செய்த பெண் போலீஸ் கைது!
சென்னை: சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ராணி (38). திருமணமாகாத இவர், மைலாப்பூர் அப்பு தெருவில் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்.
நேற்று முன்தினம் தலைமைச் செயலக காவல் பணியில் இருந்த ராணி மாலை 3 மணியளவில் பணி முடிந்து விடுதிக்குச் சென்றார். மாலை 6 மணிக்கு மீண்டும் இரவு பணிக்காக புறப்பட்டு வந்தவர் ஐஸ் ஹவுஸ் மார்க்கெட்டில் உள்ள காமாட்சி ஹாட் சிப்ஸ்' என்ற பேக்கரிக்குச் சென்றார்.
பிஸ்கட், கேக், சிப்ஸ் என வேண்டியதை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றார். இதையடுத்து அவரைத் தடுத்த கடை ஊழியரான தமிழரசன் என்பபவரை ராணி தாக்கினார்.
இதையடுத்து அக்கம் பக்கம் உள்ள கடைக்காரர்கள் ராணியைப் பிடித்து ஐஸ் ஹவுஸ் போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது ராணி குடிபோதையில் இருந்தது தெரிய வந்ததால் உடனடியாக இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணி மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். ராணியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது அருந்தியதற்கான சான்றிதழை போலீசார் வாங்கினர்.
பின்னர் ராணி மீது குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ராணியின் செயல் குறித்து விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ராணி போதையில் ரகளை செய்வது இது புதிதல்ல. அவர் ஏற்கனவே கரூரில் வேலை பார்க்கும் போதும், அதன் பிறகு கோவையில் வேலை பார்க்கும் போதும் போதை புகாரில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதலாகி அவர் சென்னை வந்தார். சென்னையிலும் அவரது பழைய போதை பழக்க வழக்கம் தொடர்ந்தது.
மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த அவர், சமீபத்தில் தான் மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார் என்றார்.
இந் நிலையில் ராணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications