ஆட்டோ பெர்மிட் நிறுத்தி வைப்பு-தேர்தல் ஆணையம் உத்தரவு
நெல்லை: சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பயணிகள் ஆட்டோவுக்கு பெர்மிட் வழங்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசின் இலவச திட்டங்கள், நலத்திட்டங்கள், இலவச மருத்துவ முகாம் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ரேஷன் கார்டு வழங்குவது, பட்டா வழங்குவது, தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பது, மகளிர் குழுவுக்கு கடன் வழங்குவது, மகளிர் குழு செயல்படுவது ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் பயணிகள் செல்லும் புதிய ஆட்டோவுக்கும் பெர்மிட் வழங்க வேண்டாம் என அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் புதிய ஆட்டோ வாங்க புக்கிங் செய்த ஆட்டோ டிரைவர்கள் பதிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கோடிக் கணக்கில் முதலீடு செய்து ஆட்டோ வாங்கி வைத்துள்ள டீலர்களும் விற்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது,
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர். முன்பு புதிய ஆட்டோ வாங்க வேண்டுமானால் பணம் கட்டி 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும். தற்போது பணம் கட்டியதும் ஆட்டோ டெலிவரி செய்யும் நிலை உள்ளது. ஆனால் தற்போது புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் டுரீஸ்ட் கார்களுக்கு பெர்மிட் வழங்குவது நிறுத்தப்படவில்லை. இதனால் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படுவர். எனவே ஆட்டோவுக்கு பெர்மிட் வழங்குவதை நிறுத்தி வைத்து பிறப்பித்துள்ள உத்தரவை மறு பரீசிலனை செய்யக் கோரி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளோம் என்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications