காங்கிரஸ் தொகுதிகளில் அதிமுக: பாமக தொகுதிகளில் தேமுதிக-ஜெ அதிரடி வியூகம்

தமிழகத்தி்ல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மிக நன்கு உணர்ந்தவரான அவர், அந்தக் கட்சிக்குத் தரப்படும் ஒவ்வொரு கூடுதல் தொகுதியும் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க தனக்குப் பெருமளவில் உதவும் என்று கருதுகிறார்.
இதனால் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் எல்லாம் நேரடியாகவே அதிமுகவை களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
அதே போல வட மாவட்டங்களில் பலமாக உள்ள விஜய்காந்தின் தேமுதிகவை பாமக போட்டியிடும் இடங்களில் பெருமளவில் களத்தில் நிறுத்தவும் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.
பாமகவுக்கு செல்வாக்கு அதிகமுள்ள வட மாவட்டங்களில் தான் விஜய்காந்துக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. இதை கடந்த சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தல்களில் பாமகவுக்கு பெரும் போட்டியை கொடுத்ததன் மூலம் நிரூபித்தது தேமுதிக.
இதனால் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் முடிந்து திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளன என்பது அறிவிக்கப்பட்ட பின்னரே அதிமுகவில் தொகுதிகள் ஒதுக்கீடு நடக்கும் என்று தெரிகிறது. இதனால் தான் தேமுதிகவுடன் ஜெயலலிதா இதுவரை தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் தேமுதிகவுக்கு வட மாவட்டங்களில் தான் அதிக தொகுதிகள் தரப்படும் என்பதை விஜய்காந்திடம் ஜெயலலிதா ஏற்கனவே கூறிவிட்டதாகவும் தெரிகிறது. இதையே தானும் விரும்புவதால் அதற்கு விஜய்காந்தும் ஓ.கே. சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
இதன்மூலம் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அதிமுக தான் போட்டியிடவுள்ளது. இதன்மூலம் காங்கிரசுக்கு எதிரான தமிழர் அமைப்புகளின் ஆதரவும் இலவசமான பிரச்சாரமும் தானாகவே அதிமுகவுக்குக் கிடைக்கும் என்றும், காங்கிரசுக்காக திமுகவினர் இந்தமுறை ரொம்பவும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றும் அதிமுக கருதுகிறது.
இதனால் காங்கிரசை புரட்டி எடுப்பது எளிதாக இருக்கும் என்று ஜெயலலிதா கருதுகிறார்.
அதே போல திமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 30 தொகுதிகளிலும் பெரும்பாலும் தேமுதிகவையே நிறுத்தி அவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications