ரஜினி - சோ திடீர் சந்திப்பு-அதிமுக கூட்டணிக்கு ஆதரவு?

அதிமுகவுக்கு ஆதரவான சக்திகளை திரட்டும் வேலையில் சோ உள்ளிட்ட சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது ஆலோசனையைத்தான் தற்போது ஜெயலலிதா மிக மிக அதிகமாக கேட்கிறார், நம்புகிறார், செயல்படுகிறார். இந்த சோ மாதிரியானவர்கள் யோசனைப்படிதான் அவர் மதிமுக , இடதுசாரிகளை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சோ ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியுள்ளார்.
1996-க்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் ரஜினி ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழும். அவர் யாருக்கு வாய்ஸ் கொடுக்கப் போகிறார் என்பதை ஒரு கட்டாயக் கேள்வியாகவே மாற்றி விட்டனர். அவர் அரசியலுக்கு வருவார் என்று இன்னும் அவரது ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு அரசியல் ஆசை இல்லை என்பதை அவர் சூசகமாகக் கூறி வருகிறார். தொடர்ந்து சினிமாவில் கோலோச்சுவதே அவரது விருப்பமாகவும் உள்ளது.
வழக்கம் போல இந்த முறையும் தமிழக சட்டசபைத் தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு? என்ற கேள்வியை எழுந்துள்ளது.
இதற்குக் காரணம் சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்பு. ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் துக்ளக் ஆசிரியர் சோ சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரம் இன்றைய நிலவரம், கூட்டணிகள், யாருக்கு ஆதரவு தரவேண்டும் என்பது குறித்தெல்லாம் பேசியதாகக் கூறப்படுகிறது.
சந்திப்பு முடிந்த பிறகு ரஜினியும், சோவும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தனியாகவே சென்றனர். அவர்கள் எங்கு சென்றனர்? யாரை சந்தித்துப் பேசினார்கள்? என்ற விவரம் மர்மமாகவே உள்ளது.
இன்னும் சில தினங்களில் தமிழக அரசியல் பிரசாரம் சூடு பிடிக்கும் போது ரஜினி தனது கருத்தை வெளியிடுவார் என்றும் கூறுகிறார்கள்.
இதுகுறித்து சோவிடம் கேட்ட போது, "இதுபற்றி எதுவும் சொல்வதற்கில்லை. ரஜினியின் முடிவு குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் இப்போதைக்கு சொல்ல இயலாது" என்றார் சோ.
அ.தி.மு.க அணியில் விஜயகாந்தின் தே.மு.தி. க.வை இடம் பெற செய்ததில் சோ முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் ரஜினியைச் சந்தித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications