மதானியை சந்திக்க மனைவி சூபியாவுக்கு அனுமதி
திருவனந்தபுரம்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானியை சந்திக்க அவருடைய மனைவி சூபியாவுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டில் எர்ணாகுளத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட தமிழக அரசு பேரூந்து தூப்பாக்கி முனையில் கடத்தி எரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் மதானியின் மனைவி சூபியா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சூபியா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வாரத்துக்கு ஒருமுறை எர்ணாகுளத்தில் போலீஸ் முன் ஆஜாராகி கையெழுத்திட வேண்டும். எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லகூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை சூபியாவுக்கு மத்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் மதானியை சந்திக்க அனுமதி கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் சூபியா மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார்.
மதானியை சந்திக்க பெங்களூர் செல்ல சூபியாவுக்கு மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவி்ட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications