ஜப்பான்: 3 வது அணு உலையும் வெடித்தது... 19 பேர் காயம்; 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்

இந்த வெடிப்பு காரணமாக மணிக்கு 20 மைல் வேகத்தில் அணுக்கதிர் வீச்சு பரவும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் வேகமாக வெளியேற வேண்டும் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் நில நடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானின் 11 அணு உலைகளும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. இவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் அறிவித்துள்ள போதிலும், எந்த கட்டுப்பாடு முறைகளுக்கும் அடங்காமல், அணு உலைகளின் ஹைட்ரஜன் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது.
ஃபுகுஷிமா டாய்ச்சி அணு சக்தி நிலையத்தில் 5 ரியாக்டர்கள் உள்ளன. இவை ஐந்துமே அபாயகரமானவையாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இவற்றில் முதல் அணுஉலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து பெரும் புகையுடன் ஹைட்ரஜன் மற்றும் அணுஉலைக் கழிவுத்துகள் வெளியேறி வருகின்றன. இதில் மொத்தம் 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் முழுமையான கதிரிவீச்சுத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
இரண்டாவது அணு உலை இன்று காலை 5 மணிக்கு வெடித்தது. இதிலும் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அணுஉலைகளின் அருகாமைப் பிரதேசங்களில் வசித்தவர்களில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிற்பகலில் ஜப்பான் நாட்டு நேரப்படி 2.41-க்கு வெடித்துள்ளது. இதிலிருந்து மணிக்கு 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சுப் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் அது இன்னும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
அருகாமைப் பிரதேசங்களில் உள்ள மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அணுசக்தி நிலையத்திலிருந்து 20 கிமீக்கு அப்பால் வசிப்பவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அணுஉலைகளிலிருந்து முழுமையான கதிரியக்கம் வெளியாக ஆரம்பித்தால் ஏற்படும் அழிவின் அளவு ஹிரோஷிமா - நாகசாகியில் ஏற்பட்டதைவிட 1 லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும் என ரஷ்யாவில் மூடப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications