நெல்லை காவல் நிலையத்தில் 4 கைதிகள் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி
நெல்லை: நெல்லையில் அதிமுக பிரமுகர் கொலை தொடர்பாக காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த 4 பேர் இன்று காலை திடீரென தற்கொலைக்கு முயன்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலப்பாளையம் அருகே உள்ள மேலநந்தம் அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் சுப்பு. கொக்கிரகுளத்தில் பால் பண்ணை நடத்தி வந்த அவர் மேலநந்தம் அதிமுக பிரதிநிதியாகவும் இருந்து வந்தார்.
அவருக்கு அமுதா என்ற மனைவியும், சுதா, ராதா, விஜிலா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். சுதாவை தச்சநல்லூரைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கடந்த 8-ம் தேதி சுதாவின் வீட்டுக்கு சுப்பு பைக்கில் சென்று கொண்டிருந்தார். உடையார்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சென்றபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக் கொன்றது.
இது தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பால் வியாபாரம் செய்து வந்த சுப்பு, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். எனவே அவரை மேலநந்தம் மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சிவசாமி கொலையில் தொடர்புடையவர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.
இது தொடர்பாக சிவசாமி கொலையில் தொடர்புடைய பிச்சாண்டி, கலைசெல்வன், இசக்கிதுரை, பாபு ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர்கள் பாத்ரூம் செல்வதாக போலீசாரிடம் கூறினர். பின்னர் அங்கிருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக அவர்கள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசாரை மிரட்டுவதற்காக 4 பேரும் பினாயி்ல் குடித்ததாக தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications