சட்டசபை தேர்தல்: கோவை வரும் ஜெ. தங்க பங்களா தயார்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து அவர் கோவை வந்தால் தங்குவதற்காக காளப்பட்டியில் சொகுசு பங்களா தயாராகி வருகிறது. இந்த பங்களா தான் அப்பகுதி மக்களின் ஹாட் டாக்.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கோவை மாவட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், கோவையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் பேசப்பட்டது. இதனால் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள கோவை மாவட்டத்தில் ஜெயலலிதா போட்டியிடக்கூடும் என்று பேசப்படுகின்றது.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு கவுண்டம்பாளையம் பெரிய தொகுதியாகிவிட்டது. இங்கு சுமார் 2 லட்சத்து 89 ஆயிரத்து 912 வாக்காளர்கள் உள்ளனர். கவுண்டம்பாளையம் தொகுதிக்குள் வரும் காளப்பட்டி பேரூராட்சியில் ரத்தினகிரி வீதியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்குவதற்கான சொகுசு பங்களா தயாராகி வருகிறது.
இந்த பங்களா கோவை விமான நிலையத்தில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவில் தான் உள்ளது. மேலும், இது பாதுகாப்பானது என்று கருதப்படுகின்றது.
இந்த சொகுசு பங்களா கோவையைச் சேர்ந்த பஞ்சாலை உரிமையாளர் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. பங்களாவிற்கு எதிர்புறம் உள்ள நிலத்தில் ஹெலிபேட் அமைக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த சில நாள்களாக பங்களாவை சுத்தப்படுத்தும் பணி படுவேகமாக நடந்து வருகிறது. பங்களாவின் சுற்றுச்சுவர் முழுவதும் முள்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. பங்களாவைச் சுற்றியுள்ள பகுதியும், மிகுந்த பாதுகாப்பாக கருதப்படுகிறது.
அதேபோல பங்களாவுக்குள் குளுகுளு வசதியுள்ள அறைகளும் போதிய அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில்,
ஜெயலலிதா ஏற்கனவே ஆண்டிபட்டி, பர்கூர், காங்கயம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். வரும் தேர்தலில் காங்கயம் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடலாம் என்றனர்.
அவர் கவுண்டம்பாளையம் அல்லது காங்கயத்தில் போட்டியிடாவிட்டாலும் அவர் தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது இந்த பங்களாவில் தங்குவார் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications